Designed by Iniyas LTD
ஒட்டுசுட்டான் பொலிசாரால் மூவர் கைது..
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிசாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்
களிக்காடு பகுதியில் மாடு ஒன்றை கடத்தி கோடாலிக்கல்லு பகுதியில் கொண்டு சென்று மாட்டினை இறைச்சியாக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டில் 4 பேர் விசாரணைக்கு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்,
விசாரணைகளின் பின்னர் குறித்த சம்பவத்தின் பிரதான குற்றவாளி என கருதப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் இந்த விடயத்தின் சாட்சிகளாக இன்று நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண நீதி மன்றங்களால் சிவில் வழக்கு மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட இருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.