Designed by Iniyas LTD
வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ம் ஆண்டு வெற்றி நினைவு நாள்…
வன்னியின் இறுதி மன்னன் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் எதிர்வரும் 25.08.2018 அன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 1.30 மணிக்கு கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் வெற்றி நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவற்கழக தலைவர் இசந்திரரூபன் (தம்பியன்) தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.