Designed by Iniyas LTD
ஒருபுறம் தேசிய கொடியுடன் கொண்டாட்டம் – மறுபுறம் கறுப்பு கொடியுடன் போராட்டம் பொலிசார் குவிப்பு…
இலங்கை அந்நிய ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த நாளான இன்றைய நாளில், இலங்கையின் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது.
அதனடிப்படையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ படைத்தலைமையகத்திலும் நாட்டின் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதேவேளை,
இராணுவ முகாம் வாயிலுக்கு எதிரே 706 ஆவது நாளில்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ,கேப்பாப்புலவு மக்கள், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது நிலத்தை விடுவிக்க கோரி கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஒருபுறம் தேசிய கொடியுடன் கொண்டாட்டம் இடம்பெறும் அதேவேளை மறுபுறம் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடைபெற்றது இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிசார்பேருந்துகளில் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருன்தனர்.







