தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கக்கொடியின் கோரமுகம் காட்ட உறுதி கொள்கிறது தமிழினம்….

அத்தனை அடக்குமுறை அடாவடித்தனங்களின்
ஒட்டுமொத்த அடையாளமாய்
காற்றிலசைகிறது ஒரு கொடி…

கட்டம் கட்டிச் சிறு இனங்களை வெட்டத்துணிந்த வெறியோடு ரத்தக்கறை நிறைந்த கரம்கொண்ட வாளேந்திய சிங்கம் ஒன்று சுதந்திரத்தின் அடையாளமாய்…

வலியார் தாமென்றும், மற்றவரெல்லாம் நலிவுடையோராய் வாய்பொத்தி நிற்கவைத்துப் பெருமை கொண்டாடும் கயமைநிறைந்த பேரினவாதப் புத்துணர்வே இந்தச் சுதந்திரவிழா…

வரலாறும் வல்லமையும் கொண்ட பெருமைமிக்க இனமொன்றைக் கொன்றுகுவித்த ஆனந்தக்களிப்போடு
அரங்கேறும் ஆரியப்பெருவிழா…

இத்துணை துயர்கடந்தும்
அத்தனை அடக்குமுறைகளுக்கெதிராகவும் உலகமுற்றத்தில் நின்றபடி தன் சொந்த தேசியச் சுதந்திரத்தைப் பறைசாற்றி சிங்கக்கொடியின் கோரமுகம் காட்ட உறுதி கொள்கிறது தமிழினம்….
-காந்தள்-

Comments
Loading...