தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரு நாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

201702021246409138_South-Africa-beat-Sri-Lanka-in-2nd-ODI_SECVPFதென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்தது. மில்லர் (117 ரன்), டு பிளிஸ்சிஸ் (105 ரன்) சதம் அடித்தனர்.

பின்னர் ஆடிய இலங்கை 37.5 ஓவர்களில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 121 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் வருகிற 4-ந்தேதி ஜோகன்னஸ் பர்க்கில் நடக்கிறது.

Comments
Loading...