தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் நாடுகடந்த அரசின் ‘தமிழர் மரபு திருவிழா’!

TGTE-Tamil-Heritage-Festival-2017-156-450x300நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை(29-01-2017),  தமிழர் மரபு திருநாள் விழாவை 200 க்கு மேற்பட்ட பொது மக்களுடன் பெரியசிவன் கோயில் மண்டபத்தில் மிகக் கோலாகலமாககொண்டாடியது.

இந்த விழாவை ஒருங்கிணைத்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரபுஉரிமைக்கான மையத்தின் தலைவரும், மேல் சபை உறுப்பினர் களில் ஒருவருமான திரு இராசரெத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தமக்கே உரித்தான நேர்த்தியான திட்டமிடல் பாணியில், மிகக் குறுகிய காலத்தில், மிகசிறப்பாக இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.

மேல் சபை உறுப்பினர்களில் ஒருவரான திருமதி உஷா சிறீஸ்கந்தராஜாவந்தோரை இன் முகத்துடன் வரவேற்கும் தமிழ் பண்பாட்டுக்கு இணங்கபுன்னகை மின்னும் முகத்துடன் அனைவரையும் நன்கு வரவேற்றுஉபசரித்தார்.

தமிழர் மரபு அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் ஒரு புறம்தமிழர் மரபு சார்ந்த பொருள் காட்சியுடன் அரிய சில நூல்களும் மண்டபத்திற்குதனி சிறப்பை உருவாகியது என்றால் அந்த சிறப்புக்கே சிறப்புச் சேர்த்தது,அறுபது வருடங்களுக்கு மேலான அரசியல் அறிவுடன் நடமாடும் நூலகம் ஆக85 வயது ஈழவேந்தன் ஐயாவின் உற்சாகமான பங்களிப்பு.

விழாவின் முற் பகுதியின் தொகுப்பாளர் செல்வி பிரியங்கா, பாராட்டப்பட  வேண்டியவர் மட்டுமல்ல தமிழுக்கு பெருமை சேர்க்கக் கூடிய திறமைசாலியும்என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உலகம் நன்கு அறிந்த தொகுப்பாளர் திருமதி கோதை அமுதன்,விழாவின் பிற்பகுதியை தொகுத்து வழங்கியபோது, மிக சிறப்பாக நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளை சபைக்கு எடுத்து இயம்பினார்.

வழமை போல் அக வணக்கம்,தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்றுநடனத்தை தொடர்ந்து திரு இராசரெத்தினம் சுப்பிரமணியம் அவர்கள்வரவேற்பு உரை இடம்பெற்றது.

அத்துடன் இந்த விழாவில் திரு தந்தை சந்திரகாந்தன் சிறப்பு விருந்தினராகசமூகம் அளித்து உரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நலம் விரும்பிகள், தொண்டர்கள்,அங்கத்தவர்கள், மந்திரிகள், மேல் சபையினர் என பல தரப்பினரும் இணைந்து,இந்த விழாவை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கும் போது, எங்கோ ஒருசிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து விட்டோமோ என திகைக்க வைத்தனர் எம்சின்னம் சிறு சிட்டுக்கள்.

இந்த கொஞ்சும் தமிழ் பேசி வந்த பைங்கிளிகள், தமிழ் கலைகளின் பல்வேறுபரிமாணங்களை நம் கண் முன்னே விரிய விட்டு நம் கண்களுக்குகாதுகளுக்கும் விருந்து அளித்த போதும், அவர்கள் தொடர்ந்து ஒரு செய்தியைகூறினார்கள். அதாவது, “அஞ்ச வேண்டாம், எங்கள் அன்னை தமிழை நாங்கள்என்றென்றும் கன்னி தமிழாக காத்திடுவோம்.”

தமிழ் பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கம் விருநதோம்பல். இந்த விழாவிலும்அறுசுவை சிற்றுண்டியும் தேனீரும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது குறித்தநேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் நிறைவேறிய இந்த நேர ஒழுங்கு நாம்அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். திருயோ அன்ரனி அவர்களின்  நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.TGTE-Tamil-Heritage-Festival-2017 (26)TGTE-Tamil-Heritage-Festival-2017 (61)TGTE-Tamil-Heritage-Festival-2017 (135)unnamed (6)unnamed (7)unnamed (8)

Comments
Loading...