Designed by Iniyas LTD
ஒரே நிமிடத்தில் எதிரிகளை வீழ்த்தும் ரெஸ்லிங் வீராங்கனை ராணி ராணா
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராணி ராணா என்ற ரெஸ்லிங் வீராங்கனை தன்னை எதிர்த்தவர்களை ஒரே நிமிடத்தில் வீழ்த்தியுள்ளார்.
இந்தூர் அருகே உள்ள கோதாரியா என்ற கிராமத்தில் மகா சங்கராந்தியையொட்டி ரெஸ்லிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் குவாலியரை சேர்ந்த 21 வயது ராணி ராணாவும் பங்கேற்றார். இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது ராணி ராணா கூடியிருந்தவர்களிடம் என்னை யாராவது வீழ்த்த முடியுமா என்று சவால் விடுத்தார். அவரின் சவாலை ஏற்றுக் கொண்ட சித்ரா யாதவ் என்பவர் 45 கிலோ எடை பிரிவில் அவரை எதிர்த்து மோதினார். அவரை ராணி ஒரே நிமிடத்தில் வீழ்த்தி விட்டார். அடுத்து வினோத் பிரஜாபதி என்பவரும் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்கவில்லை. இதன் பின்னர் வந்த 2 பேரையும் அடுத்தடுத்து வீழ்த்தியுள்ளார் ராணி. இதனால் அடுத்து யாரும் ராணியுடன் மோத முன்வரவில்லை.
இந்த வெற்றி பற்றி ராணி ராணா கூறுகையில், ஆண்களை எதிர்கொள்வது எல்லாம் சவாலான விடயம் இல்லை. இதற்கு முன்பு நான் ஆண்களை தோற்கடித்துள்ளேன். என்னால் எத்தகைய ஆண்களையும் வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். தேசிய அளவிலான ரெஸ்லிங் வீராங்கனையான ராணி ராணா, இந்தூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
