Designed by Iniyas LTD
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் இன்று அறிவிக்கப்படுமா?
பாதுகாப்புப் படையினருக்கான ஒரு தகுதி, ஒரே ஓய்வூதியம் திட்டம் பற்றி மத்திய அரசு இன்று அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி டெல்லியில் முன்னாள் ராணுவத்தினர் நடத்திவரும் போராட்டம் 83ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில், ஒரு தகுதி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், ஒரு தகுதி, ஒரே ஓய்வூதியம் திட்டம் தொடர்பான எந்த பரிந்துரைகளிலும் இதுவரை தாங்கள் கையெழுத்திடவில்லை என போராட்டம் நடத்திவரும் முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதிய விகிதத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள முன்னாள் ராணுவத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவது என்ற அரசின் யோசனையை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.