தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓமந்தை சோதனை சாவடி பதிவுகள் இனி இல்லை

வவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த சாதாரண பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், அந்த இடத்தில் சோதனை நிலையம் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு நடவடிக்கைள் இன்று நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னிப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.omanthai

சோதனைச் சாவடி ஊடாக பயணிக்கும் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்றும், எனினும், வடபகுதியிலிருந்து இரும்பு கொண்டு செல்லும் வாகனங்களின் விவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் வடபகுதிக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...