தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்த வருடம் 8 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 6

இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு விசேட படகுச் சேவை குறிகாட்டுவானில் ஏற்பாடு செய்யப்படும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா தொடர்பான கலந்துரையாடல் கடந்த 28 ஆம் திகதி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் கடந்த வருடத் திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும் இந்த வருடம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு அன்றையதினம் காலையில் இருந்து விசேட படகுச் சேவைகளை குறிகாட்டுவானில் இருந்து  பெற்றுக்கொள்ள முடியும்

இதனைவிட கச்சதீவில் பக்தர்களின் தேவைகளுக்காக குடிதண்ணீர், மலசலகூடவசதிகளும் முற்கூட்டியே ஏற்பாடு செய்யப்படும். வடக்கின் வசந்தம் திட்டத்தின் 4 மில்லியன் ரூபா நிதியில் 80 மலசலகூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுந்தீவு பிரதேச சபை இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அத்துடன் பக்தர்களின் உணவுத் தேவைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுவர் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...