Designed by Iniyas LTD
யாழ். தலங்கா பிள்ளையார் கோவல் பின் வீதியில் தனியே நிற்கும் உந்துருளியால் மக்கள் பதற்றம்
யாழ்.நல்லூர் தலங்காவல் பிள்ளையார் கோவில் பின் வீதியில் நீண்ட நாட்களாக இரவு வேளைகளில் தனியே நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் கோப்பாய் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த ஆலயத்தின் பின் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தினசரி 7 மணி தொடக்கம் அதி காலை 3 மணிவரையில் தரித்து நிற்பதாகவும் 3மணிக்கு பின்னர் அதனை ஒருவர் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வரும் நபர் யார்? எங்கே செல்கிறார்? என்பது தொடர்பில் அறிய முடியாமலிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளை நேற்று இரவு 10மணியளவில் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.