தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது ..

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்  டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்திய உரைக்குப் பதிலளித்துத போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஆவா குழு  தாக்குதல்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும்,அவர்கள் அரசியல் செல்வாக்குடன் செயல்படுவதாகவும்  டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அதற்குப் பதிலளித்து  ஒழுங்கு அமைச்சர்,  வடக்கில் நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பொலிஸார்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,

கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆவா குழு அரசியல் செல்வாக்குடன் செயற்படுவதாக  எந்த முறைப்பாடும் பொலிஸாருக்கு  கிடைக்கவில்லை எனவும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...