தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் மேலும் குறையும்: அருண் ஜெட்லி

arunகடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் மேலும் குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.  வட்டி விகிதம் குறைப்பு, பொதுத்துறை வங்கிகளின் பொருளாதார நிலைமை, வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து அருண்ஜெட்லி பொதுத்துறை வங்கித்துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கித் தருமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது 2015–2016 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட அதிகம்.(பட்ஜெட்டில் வங்கிகளின் வளர்ச்சிக்கு ரூ.7,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.) நிதி ஒதுக்கீடு செய்வதில் வங்கிகளுக்கு சாதகமான முடிவை எடுப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கும். எனினும் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை வங்கிகளின் தகுதியின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும் எவ்விதத்தில், எவ்வளவு வட்டியை கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு குறைத்திருக்கின்றன என்பது குறித்து விரிவான முறையில் அறிக்கை அளித்துள்ளன.

மேலும் பல வங்கிகள் வாடிக்கையாளர் கடன்கள் மீதான வட்டியை குறைத்து உள்ளன. சில வங்கிகள் இன்னும் வட்டியை குறைக்கவில்லை. எனினும் இன்னும் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ குறைத்து விடுவோம் என்று உறுதி அளித்து இருக்கின்றன. அப்போது அந்த வங்கிகள் அதிக அளவில் வட்டியை குறைக்கும் நிலையை எட்டியிருக்கும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...