தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய அரசு ரிசர்வ் வங்கி சட்டத்தை திருத்த முடிவா?

rbiபழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கடந்த 1978-ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே அதுதொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால், இந்த முறை அப்படியல்ல. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாதது தொடர்பான அறிவிப்புதான் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நவம்பர் மாதம் 9-ஆம் தேதிக்கு முன்னதாக அச்சிடப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று சட்டப்படி அறிவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26(2)-ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.
நாடு முழுவதும் ரூ.15.5 லட்சம் கோடி மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இந்த ரூபாய் நோட்டுகள், ரூ.13 லட்சம் கோடி வரை டொபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Comments
Loading...