தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடுமையான வெப்பநிலையால் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!

11-heartburnpregnancyநாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப நிலை தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போத அசாதாரணமான வெப்ப நிலைமை காணப்படுகின்றது.

கர்ப்ப்பிணி பெண்களின் சாதாரண உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது கருவை பாதிக்கும் என மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் ருவான் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

கர்ப்பிணி தாய்மாரின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

38 செல்சியஸ் பாகை வெப்பநிலையில் கர்ப்பிணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும்.

அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணி தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும் என டொக்டர் ருவான் சில்வா தெரிவித்துள்ளார்.

Comments
Loading...