Designed by Iniyas LTD
கடும் மழை மருதமடு குள கலிங்கு சேதம்- தற்காலிக புனரமைப்பு நடவடிக்கைகள் ..
திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது
அந்தவகையில் கடும் மழை காரணமாக புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தின் கலிங்கு வழியாக நீர் வேகமாக வெளியேறியது.
இந்நிலையில் கலிங்கில் பாரிய உடைவுகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில்
கைவேலி மற்றும் கோம்பாவில் கமக்கார அமைப்புக்கள் மற்றும் இராணுவம் புதுக்குடியிருப்பு போலீசார் மற்றும் திணைகள உத்தியோகத்தர்கள் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து நீரின் வேகத்தை குறைக்கும் முகமாக மண்மூடைகளை அடித்து தற்காலிகமாக பாரிய அழிவை தடுக்கும் முகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



