தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிட்ட மஸ்தான் எம் பி…

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மற்றும்  கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது.

அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மஸ்தான் எம் பிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை சென்று பார்வையிட்டதோடு   அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு அவற்றுக்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவில் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதி மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள மன்னாகண்டல் பாடசாலை மற்றும் பொதுநோக்கு மண்டபங்களில் தங்கியுள்ள மக்களை சென்று சந்தித்து இரவு உணவினையும் அவர் வழங்கி சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...