Designed by Iniyas LTD
கடும் வரட்சியால் நந்திக்கடலில் மில்லியன்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின
முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மில்லியன் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
வட்டுவாகல் கடற்கரையில் மில்லியன் கணக்கான மீன்கள் கடந்த சில நாட்களில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இறந்தநிலையில் கரையொதுங்கிய மீன்களை அகற்றி, கடற்கரையில் புதைக்கும் நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டும் இதே போன்று பெரும் எண்ணிக்கையான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன.
கடும் வரட்சியால், நந்திக்கடலில் உப்பின் செறிவு அதிகரித்ததால், நீர்வாழ் உயிரினங்கள் இறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக, அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.