Designed by Iniyas LTD
கடைசி நிமிடத்தில் பின்வாங்கிய வைகோ
20 ஆண்டிற்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடைசி நிமிடத்தில் பின் வாங்கியுள்ளார். இது அவரது கட்சி தொண்டர்களிடயே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் உண்டாக்கியுள்ளது. 
கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த வைகோவை ஒரு தரப்பினர் தடுத்தனர். தேவர் சிலைக்கு மாலை அணிவிக்காமல், தான் இங்கிருந்து செல்லமாட்டேன் என வைகோ தெரிவித்தார்.தான் மாலை அணிவிக்க போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் வைகோ ஆவேசம் அடைந்தார். இந்நிலையில், இன்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி, அதற்கு பதில் விநாயக் ரமேஷ் என்பவரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். இதனால் குழப்பமடைந்த அவரது தொண்டர்கள் திகைத்து நின்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த வைகோ, சாதி ஒட்டுகளை முன்வைத்து திமுக வேட்பாளர் பிரசாரம் செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார், தொடர்ந்து பேசிய அவர் தாம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தேமுதிக-ம.ந.கூ., தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் பேசி முடித்தார். சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடாதது தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக கருதப்படுகிறது