தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கட்சி கொடிகள் ஏதும் இல்லாமல் நகரை சுற்றிவரும் டாக்டர் அன்புமணி

நாம் விரும்பும் சென்னை’ என்ற புதிய பிரசார பயணத்தை கடந்த 2 நாட்களாக டாக்டர் அன்புமணி நடத்தி வருகிறார். கட்சி கொடிகள் ஏதும் இல்லாமல் நகரை சுற்றிவரும் அவர் தனது பயணத்தில் பொதுமக்கள்,  கடை வியாபாரிகள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து வருகிறார்.  ramathas

இந்த சந்திப்பின் போது சென்னையின் வளர்ச்சிக் கான திட்டங்களையும், நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்ப என்ற கையேட்டு  பிரதிகளை வழங்கி அவர்களின் கருத்துக்களையும் கேட்டு வருகிறார். பெண்களிடம் மது வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? என்று கேட்டார். அப்போது பெண்கள் மது வேண்டாம் என்று பதில் அளித்தனர்.   அம்பத்தூர் ஒ.டி.யில் திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது கூறியதாவது:-   இந்த பகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரு நகரத்துக்குரிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.

அம்பத்தூர் ஏரியில் உள்ள உபரி தண்ணீர் கடலில் கலக்கிறது. இதேபோல் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்தாலே 24 மணி நேரமும் குடி தண்ணீர் வழங்க முடியும். ஆனால் தண்ணீரை கடலில் கலக்க செய்து பின்னர் கடல் நீரை குடி நீராக்கி மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்.   திருவள்ளூர்  மாவட்டத்தில் இருந்து தொடங்கும் கூவம் ஆறு 62 கிலோ மீட்டர்நீளம் கொண்டது. இதில் 50 கிலோ மீட்டர் தூரம் நல்ல தண்ணீராக செல்கிறது. எஞ்சிய  பகுதிகளை சுத்தம் செய்வதாக நிதியை சுருட்டுகிறார்கள். கூவம் என்றால் நமக்கு `கப்பு’ அவர்களுக்கு `டப்பு’. இந்த நிலை மாற வேண்டும். தொலை நோக்கு  திட்டம் இல்லாத திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்றி மாற்றாத்துக்கான வழியை கொடுங்கள்.  நீங்கள் விரும்பும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நாங்கள் கொண்டு வருகிறோம்.   இவ்வாறு  அவர் பேசினார்.   மாநில துணை பொதுச் செயலாளர் கே.என். சேகர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஏ.கே. மூர்த்தி, வக்கீல் பாலு, எதிரொலி மணியன், நகர செயலாளர்கள் சந்தானம், கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று காலையில் லாயிட்ஸ் ரோடு, பகுதியில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் பிரசார பயணம் செய்கிறார். இரவு நங்கநல்லூரில் பிரசாரத்தை நிறைவு செய்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மாவட்ட  ஆலோசகர் வெங்கடேசன் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், அமைப்பாளர் துரை முன்னிலை வகிக்கிறார்.

Comments
Loading...