தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கிய டுபாய் விமானம்

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரைவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.air

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் இன்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவலகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த அவுஸ்திரேலிய பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...