தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கணவனின் கள்ளத்தொடர்பால் அடிதடி! அவசரமாக தரையிறங்கிய விமானம்!

கத்தாரின் தோஹாவில் இருந்து நேற்று இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் கணவன் மனைவி சண்டையால் பாதியில் தரை இறக்கப்பட்டது.

கணவனின் கள்ளத்தொடர்பு! மனைவி ஆவேசம். அவசரமாக தரையிறங்கிய விமானம்

இந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தூங்கியதும் சாதாரணமாக அவரது போனை எடுத்து பார்த்து இருக்கிறார். அவரது போனின் கேலரியை ஓப்பன் செய்து பார்த்ததில் தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கணவரை தூக்கத்தில் இருந்து எழுப்பி வெளுத்து வாங்கியுள்ளார்.

கணவனின் கள்ளத்தொடர்பு! மனைவி ஆவேசம். அவசரமாக தரையிறங்கிய விமானம்

இந்த சத்தத்தில் உடன் பயணித்த மற்ற பயணிகளும் முழித்துக்கொண்டனர். அந்த சண்டையை தடுக்க வந்த விமான பணியாளர்களையும் அவர் திட்டி இருக்கிறார். இதனால் அங்கு பெரிய குழப்பம் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் விமானத்தை உடனே தரை இறக்கவும் கூறி இருக்கிறார். அவர் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறார் என்பதால் விமானத்தை தரை இறக்க பணியாளர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

மேலும் அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது கணவரும் தரையிறக்கப்பட்டார். அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதியபபடவில்லை. மேலும் அவர்களின் பெயரை வெளியிட விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர். விமானத்திலே இந்த கலவரம் என்றால் வீட்டிற்கு சென்ற பிறகு என்ன நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

Comments
Loading...