தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கணவனின் கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஒரு மாத குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்..

திரு­கோ­ண­மலை நிலா­வெளிப்  இலுப்­பங்­கு­ளத்­தில் கொலை செய்­யப்­பட்ட இரா­ஜ­ரத்­தி­னம் சுரே­ஸின் கொலைக்கு கார­ண­மான கொலை ­யா­ளி­களைக் கைது செய்­யக்­கோரி கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம்  ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி சுரேஸ் இனந்­தெ­ரி­யா­தோ­ரால் கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இது­வரை  கொலை­யா­ளி­கள் கைது செய்­யப்­ப­டாத நிலையில்  அத­னைக் கண்­டித்து குறித்த போராட்­டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கொலை செய்­யப்­பட்ட சுரே­ஸின் மனைவி ஒரு மாதக் கைக்­கு­ழந்­தை­யு­டன்  கலந்­து­ கொண்­டுள்ளார்.

இதேவேளை சுரேஸ் திட்­ட­மிட்­டுக் கொலை செய்­யப்­பட்­டதாகவும், கொலை­யா­ளி­களை உடனே கைது­செய்­ய­வேண்­டும்’ என்றும்  போராட்­டத்­தில் கலந்­து­கொண்­டோர் தெரி­வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...