தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பேருந்து விபத்து…

கதிர்காமம் யாத்திரைக்காக களுத்துறையில் இருந்து சென்ற பேருந்தொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புந்தல – கிரிந்த பிரதான வீதியின் ஊரனிய சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தி  15 பேர் காயமடைந்துள்ள நிலையில்  13 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் மற்றைய இருவர் தெபரவெவ ஆதார மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த  விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

.

 

 

Comments
Loading...