தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் கோர விபத்து – முவர் பலி…

கனடாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஒன்டாரியோ Port Perry பகுதியில் ஏற்பட்ட  இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்  இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரொரன்டோவுக்கு 80 கிலோ மீற்றருக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனத்தின் ஆண் சாரதி மற்றும் மற்றைய வாகனத்தில் இரண்டு பெண் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு ஆண் மற்றும் பெண் படுகாயமடைந்த நிலையில்  ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...