தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்

கனடா டொரோண்டோ ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட்சதுர்க்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.

இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட International Assosiation of Genocide Scholars இன் தலைவரும் பேராசிரியருமான Danial Ferenstein சிறப்புரை ஆற்றினார். அவரது நம்பிக்கையூட்டும் உரையை கேட்பதற்கு என மக்கள் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.

ஈழ மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தி பேசினார். உலகெங்கிலும் இனப்படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எங்குமே நடைபெறாத கொடிய இனப்படுகொலை வடிவம் தமிழீழத்தில் நடைபெற்றது என்றார். பல நூற்று கணக்கான மக்கள் இன் நிகழ்வில்கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் பல எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

canada black

Comments
Loading...