Designed by Iniyas LTD
கறுப்பு ஜீலை வேண்டாமெனும் பேரில் கையெழுத்து இயக்கம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாமெனும் பேரில் கையெழுத்து இயக்கமொன்றை சமவுரிமைகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளது.
கையெழுத்து வேட்டை நிகழ்ந்த சூழலை இராணுவத்தினர் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்க அதையும் தாண்டி பெருமளவிலான மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு வந்து தமது ஒப்பங்களை இட்டு ஆதரவை வெளிப்படுத்தியவாறு இருந்தனர்.
இலங்கையின் பலபகுதிகளிலும் அவர்கள் ஏற்கனவே இத்தகைய கையெழுத்து வேட்டையினில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
