Designed by Iniyas LTD
கருணாநிதியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
திண்டுக்கல்லில் BJP அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என கருத்து தெரிவித்திருப்பது கருணாநிதி வகித்த பதவிகளுக்கு அழகல்ல என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார் .
எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டத்தில் யாருக்கு எதிராக எப்போது பாஜக வன்முறையை தூண்டியது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொறுப்புள்ள ஒரு தலைவர் இப்படி பேசுவதை தயை கூர்ந்து நிறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.