தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கர்ப்பிணி மனைவியில் சந்தேகம்! குத்திக் கொலை செய்த கணவன்

டெல்லி ஜஹாங்கீர்புரியை சேர்ந்தவர் சிம்ரன்(22). இவரது கணவர் ஆஷுபால். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே, சிம்ரன் மீண்டும் கர்ப்பமானார்.

இந்நிலையில், சிம்ரனின் சகோதரர் நேற்று காலை அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிம்ரன் போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவர், சிம்ரன் வீட்டுக்கு சென்றார். கதவின் வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டார். இதுகுறித்து ஆஷுபாலிடம் கேட்டதற்கு, சிமரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தூங்குகிறார் என கூறினார்.

சிம்ரனின் சகோதரருக்கு சந்தேகம் தீரவில்லை. இதையடுத்து, கதவை உடைத்துப் பார்த்தார். அங்கு சிம்ரன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ந்தார்.

இதுதொடர்பாக சிம்ரனின் சகோதரர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சிம்ரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆஷூபாலை தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சிம்ரனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆஷுபால், அவரை குத்தி கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், கர்ப்பிணி மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments
Loading...