Designed by Iniyas LTD
களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
தொடர் விடுமுறை காரணமாகக் களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள தலையணையில் குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருகை புரிவது வழக்கம். 
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை காரணமாக கடந்த இரு நாட்களாகச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தலையணையில் குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.