Designed by Iniyas LTD
சுதந்திரப் போராட்டத் தியாகியின் அவலம்
சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர், கடந்த 65 ஆண்டுக் காலமாகத் தான் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கக் கோரித் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குடியிருக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி மதுரையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகக் 3 மாதங்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 65 ஆண்டுகளாக வேடசந்தூரில் நத்தம் புறம்போக்கில் தான் குடியிருக்கும் தனது வீட்டிற்குப் பட்டா கேட்டு, சுமார் 40 ஆண்டுகாலமாக பல மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்தார். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத்துக்குப் பலமுறை விண்ணப்பங்களை அளித்தும் தனக்கு வழங்காமல் அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
