Designed by Iniyas LTD
காங்கேசன்துறையில் ஆணின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, தாவடிப்பகுதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தாவடி தெற்குப்பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஸ்ரீ பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.