தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வான் தாக்குதலில் 42 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் ஒரு பக்கமும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றொரு பக்கமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்து, தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு உளவு தகவல்கள் கிடைத்தன.  இதையடுத்து அங்கு விமானப்படை அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. உடனே விமானப்படை விமானம், நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாisis1க கூறப்படுகிற பகுதிகளை குறிவைத்து, 14–ந் தேதி வான்தாக்குதல் நடத்தியது.

ஆனால் இது குறித்த தகவல்கள் நேற்றுதான் வெளியிடப்பட்டன.  இந்த வான் தாக்குதலில் 42 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.  இந்த தாக்குதலின்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சிமுகாம் ஒன்று நிர்மூலமாக்கப் பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  சமீப காலத்தில் ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...