தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காங்கேசன்துறை தூத்துக்குடி கப்பல் சேவை தொடர்பில் நேரில் ஆய்வு!

kks-450x280காங்கேசன்துறை தூத்துக்குடி கப்பல்சேவை  ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறை துறைமுகத்தினை நேரில்  ஆய்வு செய்தனர்.

இந்திய தூத்துக்குடி  துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகத்திற்கும் இடையில் நேரடி கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் அதன் சாத்தியங்கள் தொடர்பிலும் காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலை, கப்பல் போக்குவரத்திற்காக மேற்கொள்ளவேண்டி புனரமைப்பு பணிகள் தொடர்பாகவே குறித்த குழுவினர் மேற்படி ஆய்வில் ஈடுபட்டனர்.

இதேவேளை பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் முயற்சியாக  இந்திய  அதிகாரிகள்  குழு  கடந்த ஏப்ரல் மாதம் பலாலிக்கு வருகை தந்த   தமிழ்நாடு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் பலாலி    விமான ஓடுபாதை அதன் தரம் மற்றும் அலுவலகச் செயல்பாடுகளிற்கான இடவசதிகள் , பாதுகாப்பு நிலமைகளுடன் விமான ஓடுபாதையின் அளவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினர்.

இவ்வாறு விசேட கவனம் செலுத்திய குழுவினர் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக மக்களின் வாழ்விட நிலங்களை மேலதிகமாக அபகரிக்காமல் மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பிலும் இந்தியா மற்றும் பலாலி இடையே மேற்கொள்ளும் விமானவசேவைக்காக பலாலியில் செய்ய வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் டில்லிக்கு அறிக்கை செய்திருந்தனர்.

அவ் அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளவேண்டி அபிவிருத்திகளின் மாதிரியினை செய்யும் செலவு இந்திய ரூபாவில் ஒரு கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் பலாலி சென்னை விமான போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

இதேபோன்று தற்போது  காங்கேசன்துறை தூத்துக்குடி கப்பல்சேவைக்கான ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறு இந்தியாவில் இருந்து வருகைதந்த கப்பல் துறை அதிகாரிகளை யாழில் உள்ள இந்தியத் தூதுவர் நட்ராஜ் வரவேற்று அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...