தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு!

vinayagar-chathurthi-1-960x400-450x188நாடுமுழுவதும் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை வீடுகளிலும் தெருக்களிலும் பிரதிஷ்டை செய்வதற்கான பூஜை ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், 3 அடிக்கு மேல் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு கண்டிப்பாக காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். சாலைகளின் ஓரத்திலும் பொது இடங்களிலும் சிலைகள் வைக்க அந்த பகுதி போலீசாரிடமே அனுமதிபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மசூதிகள், தேவாலயங்கள் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு சென்னையில் மட்டும் இந்து அமைப்புகளின் சார்பில் சுமார் 5,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2,500 சிலைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னையில் வரும் 10, 11ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் பாதுகாப்புக்காக சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், விநாயகர் சிலைகளை பிரச்னைக்குரிய இடங்களில் வைக்க வேண்டாம் என போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார். போலீசாரின் அனுமதி பெறாமல் சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...