Designed by Iniyas LTD
காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு?
திருகோணமலை புல்மோட்டைப் பகுதியில் நண்பர்களுடன் அரிசிமலை பகுதியில் இன்று (07) திங்கட்கிழமை நண்பகல் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை தக்வா நகர் மீனவர்கள் தேடுதல் மேற்கொண்டு சுமார் ஒன்றரை மணித்தியாலயத்திற்குப் பின் மாணவனை சடலமாக மீட்டுள்ளனர்.
திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த அமீர் நபீஸ் (வயது 15) தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேர பரிசோதனைக்காக புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.