Designed by Iniyas LTD
திருமலையில் கோர விபத்து – தந்தை பலி மகன் படுகாயம்
திருகோணமலை – ஹொரவபொத்தானை பகுதியில் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தவர் சீனக்குடா சின்னன்பிள்ளை சேனையை சேர்ந்த முகம்மது இஸ்மாயீல் இஷாக் (59வயது) என தெரியவருகின்றது.
தந்தையும், மகனும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இந்த நிலையில் ஸ்தலத்திலேயே தந்தை முகம்மது இஸ்மாயீல் இஷாக் உயிரிழந்துள்ளதுடன், மகனான ஆர்.பர்வீஸ் (24 வயது) காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.