தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்!

manoganehsanபோரின்  போது காணாமல் போனோரது  உறவினர்கள்  தொடர்ந்தும்  அச்சுறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்,  அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் சர்வதேச ஊடகமொன்றுக்குத்  தெரிவித்துள்ளார்.
இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோர் மற்றும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி வழியாக மற்றும் நேரடியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், பெண் பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லையென்றும் வடக்கு கிழக்கிலுள்ள பெண்கள் தம்மிடம் முறையிட்டு அழுதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ,இப்பிரச்சினை குறித்து வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாவும் , இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை  எடுப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.
Comments
Loading...