தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனோரின் குடும்பத்துக்கு ICRC உதவி!

ICredCross-ICRCகடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவியளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

காணாமல்போனவர்களுக்கு உதவியளிப்பது தொடர்பாக கொழும்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது என்றும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உதவியளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் காணாமல் போனவர்கள் கடத்தப்படவர்கள் பற்றிய விபரங்களை திட்டடி அவர்களின் உறவினர்களுக்கு உதவியளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷா டி சில்வா மேலும் கூறினார்.

மாவட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்றும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றும் அந்த அடிப்படையில் விரைவில் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவின் தலைவர் கிளரி மேரூட் குறிப்பிட்டார்.

2006-07 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் சுமார் 200க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு மற்றும் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...