தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு உதவ அமெரிக்கா தயார்!

senpakamஇறுதிக்கட்டப் போரில் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கவுள்ளது
இதன்படி அமெரிக்கா இந்த அலுவலகம் தொடர்பில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரஜைகள் மற்றும் அந்த நாட்டின் சட்டரீதியான வதிவிடவாளர்களின் நலன் கருதி, அமெரிக்காவின் ஒத்துழைப்பு இந்த அலுவலகத்துக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜெனீவாவில் இலங்கையுடன் இணைந்து யோசனையை முன்வைத்த தரப்பு என்ற அடிப்படையிலும் இந்த உதவி வழங்கப்படுவதாக அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்தின் குறித்த அலுவலக யோசனைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது. எனினும் இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளின் கருத்துக்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த அலுவலகம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, போரின்போது காணாமல் போனதாக கூறப்படும் பலர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments
Loading...