Designed by Iniyas LTD
காணிக்குள் அடியெடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடரும்!
எங்களது காணிக்குள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கேப்பாப்புலவில் 32வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்தனர்.
279 ஏக்கர் காணிகள் மே 15ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளதை நம்பி நாங்கள் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கம் விடுவிப்பதாக தெரிவித்துள்ள 217 ஏக்கர் காணிகளில் முதலில் விடுவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள 31 ஏக்கர் காணி போராட்டம் நடத்தும் மக்களுக்குச் சொந்தமானதல்ல.
இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடாது அரசாங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் 138 குடும்பங்களுக்கும் உரித்தான காணிகளை உடனடியாக மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.