தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

201704021341182650_Pakistan-T20-match-against-West-Indies-win_SECVPFபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான நான்கு 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது.

கமரன் அக்மல் 48 ரன்னும், பாபர் ஆசம் 43 ரன்னும் எடுத்தனர். சாமுவேல் பத்ரி 2 விக்கெட்டும், வில்லியம்ஸ், பிராத்வெயிட், சுனில் நரின், சாமுவேல்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 31 பந்து எஞ்சி இருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

தொடக்க வீரர் லீவிஸ் 51 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். சோகைல் தன்வீர், சதாப் கான், வகாப்ரியாஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

4 போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது.

Comments
Loading...