தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காலியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை!

காலி- கராப்பிட்டி, சர்கியுலர்  சந்தியில்  நேற்று (01) இரவு, நபர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென,  காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, மகுலுவ பகுதியைச் சேர்ந்த, சியம்பலாகொட கமகே ஜீவக சுரங்க (36) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர் ஒருவருடன் மது அருந்திய போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட, நண்பன் இவரை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கானவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, கைது செய்யவதற்கான நடவடிக்கையில், காலி பொலிஸார் ஈடபட்டுள்ளனர்

Comments
Loading...