Designed by Iniyas LTD
காலி முகத்திடலில் மகிந்த அணியின் மே தினக்கூட்டம்!
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனராக வசந்த ஒபேசேகரவின் உடல் நலம் விசாரிக்க தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடலில் நடத்த அனுமதிக்கப்படாது என அமைச்சர் கபீர் ஹாசிம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து குறித்து ஊடகவியலாளாகள் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன் போது, “காலிமுகத் திடல் மைதானத்தை தருவதாக எமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மே தினக் கூட்டத்தை நடத்த உள்ளோம்” என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.