Designed by Iniyas LTD
காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் கோபி யான் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர். அப்போது 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு முற்றுகையிட்டனர்.
உடனே அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டதால் இருதரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் கோபியான் மாவட் டம் பெக்லி போரா என்ற இடத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி பரூக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டான். இதே போல் குப்வாரா மாவட்டத்திலும் ஒரு தீவிர வாதி சுட்டுக் கொல்லப்பட் டான். தொடர்ந்து அங்கு தீவிரவேட்டை நடந்து வருகிறது