தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிரிக்கெட் : இந்தியா – தென்னாப்ரிக்கா இடையே 3வது ஒருநாள் போட்டி

indian cricketஇந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

 குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 மேலும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...