Designed by Iniyas LTD
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக அமைச்சர் சூசக தகவல்
தமிழகத்திற்கு தர வேண்டிய 45 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட முடியாது என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்திற்கு தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் திறக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளித்த கர்நாடக அமைச்சர் பாட்டீல், நீதிமன்றத்தின் நோட்டீஸ் கிடைத்த உடன் உரிய முறையில் பதில் அளிக்கப்படும் என கூறினார்.
செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 45 டிஎம்சி நீரை கர்நாடகா இதுவரை திறந்துவிடவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் நீர் திறக்காவிட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.