தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிரிக்கெட் போட்டித்தொடருக்கு இணையாக கால்பந்து போட்டிகள்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடருக்கு இணையாக கால்பந்து போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. இந்த தொடர் டிசம்பர் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.indian_super_league_teams_001

இதில் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ கொல்கத்தா, எப்.சி கோவா, புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடட் மற்றும் டெல்லி டைனமோஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகளையும் கிரிக்கெட் பிரபலங்களான டெண்டுல்கர், கங்குலி, டோனி, பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரகாம், ரன்பீர்கபூர் மற்றும் தொழில் அதிபர்கள் வாங்கி உள்ளனர். மொத்தம் 61 போட்டிகள் நடைபெறவுள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து வீரர்கள் லுயஸ் கார்சி (ஸ்பெயின்), புருனோ (இத்தாலி), எலனோ ராபர்ட் பியர், டேவிட் டிரெஸ்கெட் (பிரான்ஸ்) உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் உள்ள 8 அணிகளில் 49 வெளிநாட்டு வீரர்கள் ஆடுகிறார்கள்.

இன்றிரவு ஆரம்பமாகும் முதல் போட்டியில் கொல்கத்தா– மும்பை அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறும்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைப்பார். தொடக்க விழா பிரம்மாண்டமாக நடக்கிறது. விழாவில் பாலிவுட் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Comments
Loading...