Designed by Iniyas LTD
தேவையில்லா செயலால் தர்மசங்கடத்தில் நட்சத்திர வீரர் பொல்லார்ட்
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட், தான் செய்த தேவையில்லாத செயலால் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டார். நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடியது. 6 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் 48வது ஓவரை வெய்ன் பிராவோ வீசினார்.
அந்த ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார் அதை அடிக்க அது நேராக பொல்லார்ட் கைக்கு சென்றது. இந்நிலையில் அந்த பந்தை பிடித்த பொல்லார்ட் அதை திரும்பி வீசாமல் அதை கோட்டை விட்டவர் போல பாவணை செய்து கொண்டிந்தார்.
ஆனால் ஒரு ஓட்டங்கள் எடுத்த நிலையில் இதை உணர்ந்த டோனியும், புவனேஷ்வர் குமாரும் மீண்டும் வேகமாக ஓடி மற்றொரு ஓட்டம் எடுத்தனர். இந்த சம்பவம் மூலம் பொல்லார்ட் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனையடுத்து ஒரு நிமிடம் அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்து போனது. இந்த போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=9Sb0x2QOL-I” width=”560″ height=”315″]