தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளி/கச்சேரிக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.demo

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், நீண்ட காலமாக எந்த தீர்வுகளும் இன்றி காணப்படும் காணாமல் போனார் மற்றும் சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்து, விரைவில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தரக்கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு, ஜனாதிபதிக்கான மனுவை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடமும் வடக்குமாகாண முதலமைச்சருக்கான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடமும் வழங்கிவைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், காணாமல் போன மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Comments
Loading...